
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; சூலுார் கலைவாணி மெட்ரிக் பள்ளியில், 32வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் நடராஜன் தலைமை வகித்தார். முதல்வர் வளர்மதி ஆண்டறிக்கை வாசித்தார்.
கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., முதன்மை அதிகாரி பிரேம் குமார், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில், ''தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி நம்மை தேடி வரும். பெற்றோர் மற்றும் ஆசிரியரின் வழிகாட்டுதல் படி நடப்பது ஒவ்வெருவரின் கடமையாகும்,'' என்றார். தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

