/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை விடுமுறையில் பள்ளி துாய்மை பணிகள்
/
கோடை விடுமுறையில் பள்ளி துாய்மை பணிகள்
ADDED : ஏப் 21, 2025 09:59 PM

கோவை,;2024--- 2025 கல்வியாண்டு முடிவடையும் நிலையில், மே 15ம் தேதி முதல், 196 பள்ளிகளில் தூய்மை பணிகள் தொடங்க உள்ளன.
இது குறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
கோடை விடுமுறையின் போது, பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள், தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகள், ப்ளீச்சிங் பவுடர் கொண்டு முழுமையாக சுத்தம் செய்யப்படும்.
பள்ளி கட்டட சுவர்களுக்கு வெள்ளை அடிக்கப்பட்டு, மேசைகள், பெஞ்ச்கள் மற்றும் கரும்பலகைகளுக்கு புதிய வண்ணம் பூசப்படுவது வழக்கம்.
ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளில், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்யும் பணியும் நடைபெறும்.
இது, மாணவர்களின் கற்றல் சூழ்நிலையை மேலும் மேம்படுத்தும். ஆகவே, 2024--2025 கல்வியாண்டு முடிவடையும் நிலையில், மே 15ம் தேதி முதல், இந்த தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகள் தொடங்கும். புதிய கல்வியாண்டில், மாணவர்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழ்நிலை ஏற்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.