ADDED : பிப் 20, 2026 05:20 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் தொடர்பாக, தனியார் பள்ளி டிரைவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
துடியலுார் வட்டமலைபாளையம் அருகே உள்ள வனத்தில், பாதி எரிந்த நிலையில், 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது. துடியலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதல் கட்ட விசாரணையில், கொலை செய்து எரிக்கப்பட்ட பெண், துடியலுார் அருகே செங்காளி பாளையத்தை சேர்ந்தவர் என்பதும், இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி டிரைவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
