/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசூரில் பள்ளி கல்வி துறை இயக்குனர் ஆய்வு
/
அரசூரில் பள்ளி கல்வி துறை இயக்குனர் ஆய்வு
ADDED : மே 26, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.
சூலுார் அடுத்த அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள், கலையரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டார். புதிய வகுப்பறைகள் கட்டும் பணியை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.
பிளஸ் 2 பொது தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கு, ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவருகளுக்கு புத்தகங்கள் பரிசளித்து பாராட்டினார்.