/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய கட்டடங்களில் பள்ளிக்கல்வித்துறை; ஒரு மீட்டிங் போட பள்ளிகளை நாடும் நிலை: ஒருங்கிணைந்த வளாகம் அமைக்க கோரிக்கை

ADDED : ஆக 26, 2025 10:49 PM

கோவை; கல்வியில் நவீன தொழில் நுட்பங்களால், மாணவர்கள் கற்றலில் வேற லெவலுக்கு சென்று கொண்டிருக்கும் இன்றைய நிலையில், கோவை மாவட்டத்தில் பள்ளிக்கல்வி நிர்வாக கட்டடங்கள், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள, பழைய கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.
சென்னைக்கு அடுத்தபடியாக கல்வி, தொழில், மற்றும் ஆராய்ச்சி மையமாக வேகமாக வளர்ந்து வரும் கோவையில், பள்ளிக்கல்வியின் அலுவலக பணிகளுக்கான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.
அடிப்படை வசதிகள் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, பயிற்சி வகுப்புகள் போன்றவற்றை நடத்த, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அதிகாரிகள் நாட வேண்டிய நிலை உள்ளது.
பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மதிப்பீடு, தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுடனான கலந்தாய்வுகள் போன்றவற்றை நடத்துவதற்கும் தனியார் பள்ளிகளை நாட வேண்டிய சூழல் உள்ளது. சில சமயங்களில், பயிற்சி நடத்த இடம் கிடைக்காததால், திட்டமிடப்பட்ட பயிற்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன.
மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள கழிவறைகள் போதுமானவையாக இல்லை; தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது.
கழிவறை எண்ணிக்கையை அதிகரித்து பராமரிக்க வேண்டும் என்று, கல்வி அலுவலக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.