/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனிதே நிறைவு பெற்றது பள்ளி வழிகாட்டி -2026! தீர்வுகளுடன் மகிழ்ச்சியாக விடைபெற்ற பெற்றோர்
/
இனிதே நிறைவு பெற்றது பள்ளி வழிகாட்டி -2026! தீர்வுகளுடன் மகிழ்ச்சியாக விடைபெற்ற பெற்றோர்
இனிதே நிறைவு பெற்றது பள்ளி வழிகாட்டி -2026! தீர்வுகளுடன் மகிழ்ச்சியாக விடைபெற்ற பெற்றோர்
இனிதே நிறைவு பெற்றது பள்ளி வழிகாட்டி -2026! தீர்வுகளுடன் மகிழ்ச்சியாக விடைபெற்ற பெற்றோர்
UPDATED : ஜன 05, 2026 05:56 AM
ADDED : ஜன 05, 2026 05:54 AM

கோவை: பள்ளிக்கல்விக்கான அடித்தளத்தை ஆழமாக விதைக்க வழிகாட்டிய, 'தினமலர்' நாளிதழ் ' பள்ளி வழிகாட்டி-2026' நிகழ்ச்சி, இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்வை, நம் நாளிதழுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்விநிறுவனங்கள் இணைந்து நடத்தியது.
கடந்த இரண்டு நாட்களாக அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெற்றோர் குழந்தைகளுடன் திரளாக பங்கேற்றனர்.
சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி., சிறப்பு கல்வி என்ற பிரிவுகளின் கீழ், 60க்கும் மேற்பட்ட முன்னணி பள்ளிகள் சார்பில், அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை, பள்ளி பிரதிநிதிகள் பெற்றோருக்கு தெளிவான விளக்கங்களை அளித்தனர். இரண்டாம் நாளான நேற்று மாலை வரை, எராளமான பெற்றோர் தகவல்களை திருப்தியுடன் பெற்றுச்சென்றனர்.
கரம் கோர்த்தவர்கள் தினமலர் நாளிதழ் - எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி இணைந்து வழங்கிய 'பள்ளி வழிகாட்டி-2026' நிகழ்வில், நேஷனல் மாடல் கல்விக்குழுமம் முக்கிய ஸ்பான்சராகவும், அத்வைத் தாட் அகாடமி, மான்செஸ்டர் சர்வதேச பள்ளி இணை ஸ்பான்சர்களாகவும் பங்கேற்றன.
இன்முகத்துடன் பதில் என் மகன் ஒன்பதாம் வகுப்பில் இருந்து, பத்தாம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு மாற்ற உள்ளோம். அதற்காக இங்கு பள்ளிகளை நேரடியாக காணவந்தோம். ஒவ்வொரு அரங்கிலும் தெளிவாக பதில் அளித்தனர். தினமலர் நாளிதழுக்கு நன்றி. இதுபோன்ற நிகழ்வு பெற்றோருக்கு உதவியாக இருக்கும். -மோகன்குமார் சாய்பாபா காலனி
அனைத்தும் ஓர் இடத்தில் ஆசிரியர், மாணவன் விகிதங்கள் குறித்து இங்கு தெரிந்துகொண்டோம். கல்வியுடன் கூடுதலாக குழந்தைகள் கற்றுக்கொள்ளும் திறன்கள் குறித்தும் அறிய முடிந்தது. கட்டணம், வாகன வசதி, கற்பித்தல் முறை என அனைத்தும் ஓர் இடத்தில் அறிந்து கொண்டோம். -ராஜேஷ் ஆர்.எஸ். புரம்
சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி என் குழந்தையை எட்டாம் வகுப்பில் சேர்க்க வேண்டும். சிறப்பு குழந்தைக்கான நல்ல பள்ளியை தேர்வு செய்ய வந்தோம். இந்நிகழ்வில் சில பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கானகற்றல் முறை எவ்வாறு இருக்கும் என அறிய முடிந்தது. -பிருந்தா ராமநாதபுரம்
சிறந்த பள்ளி கிடைத்தது தற்போது பல பாடத்திட்டங்கள் இருப்பதால், என் மகளுக்கு சிறந்த பள்ளி, பாடத்திட்டம் அறிய இந்நிகழ்வுக்கு வந்தேன். அரங்கில் உள்ளவர்கள் தெளிவான விளக்கங்களை அளித்தனர். அதிகம் அலையாமல் பல பள்ளிகளை ஒரே இடத்தில் பார்க்க முடிந்தது. சிறந்த பள்ளி ஒன்றை தேர்வு செய்துள்ளேன். - - சுருதி சுந்தராபுரம்

