/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நொய்யல் ஆற்றில் கலக்கிறது கழிவு நீர்
/
நொய்யல் ஆற்றில் கலக்கிறது கழிவு நீர்
UPDATED : ஜன 05, 2026 05:55 AM
ADDED : ஜன 05, 2026 05:51 AM

ஆற்றில் விடப்படும் கழிவுநீர்
சிறுவாணி மெயின் ரோடு, காருண்யா நகர், நல்லுார் வயல் செரும்பு பள்ளம்அருகே நொய்யல் ஆற்று நீரில் கழிவுநீர் கலக்கிறது. பொதுமக்கள், கால்நடைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. கழிவுநீர் கலப்பதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
- ரங்கராஜூ:
சாலை ஆக்கிரமிப்பு
ஒண்டிப்புதுார், சூர்யா நகர் ரயில்வே கிராசிங் செல்லும் ரோட்டில்இருபுறமும் ஆக்கிரமிப்பாக உள்ளது. வீடுகளின் ரேம்ப்களை சாலையில் ஆக்கிரமித்து கட்டியுள்ளனர். சாலையும் குண்டும், குழியுமாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை சீரமைக்க வேண்டும்.
- நாராயணன்:
உடைந்த சாக்கடை
வேலாண்டிபாளையம், 44வது வார்டு, ராமசாமி லே-அவுட் பகுதியில் சாக்கடை மூடி உடைந்து திறந்த நிலையில் உள்ளது. குழந்தைகள் விழுவதற்கு வாய்ப்புள்ளது. இப்பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. அருகில் உள்ள கம்பத்தில் தெருவிளக்கு எரியவில்லை.
- தங்கவேல்:
குழாய் உடைப்பு
தண்ணீர்பந்தல், எஸ் பெண்டில், 24வது வார்டு, சிவசக்தி நகர், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் சென்று கொண்டிருக்கிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், விரைந்து குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- நாகமாணிக்கம்:
தினமும் விபத்து
மருதமலை, இந்திரா நகர், இரண்டாவது வீதி சாலை மிகவும் மோசமாக பழுதடைந்துள்ளது. சாலையில் பெரிய, பெரிய பள்ளங்கள் உள்ளன. ஒருபுறம் தார் முழுவதும் பெயர்ந்து சாலையே இல்லாத அளவிற்கு உள்ளது. அடிக்கடி இச்சாலையில் விபத்து நடக்கிறது.
- பழனிச்சாமி:
மலைபோல் குவியும் குப்பை
கவுண்டம்பாளையம், அம்மாசை வீதி, ஏ.வி.எம்., அவென்யூ அருகே காலியிடத்தில் தொடர்ந்து குப்பையை அருகில் வசிப்போர் வீசிச்செல்கின்றனர். குட்டி மலைபோல குப்பை குவிந்து வருகிறது. சுற்றுப்புறப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- பாலாஜி: கடிக்கும் நாய்கள் மதுக்கரை மார்க்கெட் மற்றும் அருகில் உள்ள லட்சுமி நகர் போன்ற பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி வருகின்றன. சாலையில் நடந்து செல்பவர்களை நாய்கள் கடிக்கின்றன. கடந்த வாரத்தில் சாலையில் நடந்து சென்ற மூன்று பேரை நாய் கடித்துவிட்டது.
- மோகன்:
போக்குவரத்துக்கு இடையூறு
ராமநாதபுரம், பங்கஜா மில் ரோட்டில் சிக்னல் அருகில் கடைகளின் ஆக்கிரமிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேபோகிறது. சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பாதசாரிகள் சாலை நடுவே நடந்துசெல்கின்றனர். போக்குவரத்து இடையூறுகளை அகற்ற வேண்டும்.
- முகமத் ரபி:
இடிந்த சாக்கடை
பீளமேடுபுதுார், 52வது வார்டு, திருமகள் நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் சுற்றுச்சுவரின்றி உள்ளது. இதனால் சாக்கடை கால்வாயோரம் வாகனங்கள் செல்லும்போது சறுக்கி கால்வாயில் விழுகின்றன. இடிந்த கால்வாயை சீரமைத்து பலப்படுத்த வேண்டும்.
- யுவராஜ்:
இருளால் பெருகும் குற்றம்
காளப்பட்டி, அசோக் நகர், சேரன் அவென்யூ, நான்காவது பேஸ் பகுதியில் தெருவிளக்கு பழுதாகியுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் வெளியே நடமாட முடியவில்லை. வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
- நாராயணன்:

