/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்விக்கு வழிகாட்டும் 'பள்ளி வழிகாட்டி- 2025' அரங்குகளை தேடி திரண்டு வந்த பெற்றோர்
/
கல்விக்கு வழிகாட்டும் 'பள்ளி வழிகாட்டி- 2025' அரங்குகளை தேடி திரண்டு வந்த பெற்றோர்
கல்விக்கு வழிகாட்டும் 'பள்ளி வழிகாட்டி- 2025' அரங்குகளை தேடி திரண்டு வந்த பெற்றோர்
கல்விக்கு வழிகாட்டும் 'பள்ளி வழிகாட்டி- 2025' அரங்குகளை தேடி திரண்டு வந்த பெற்றோர்
ADDED : பிப் 15, 2025 11:06 PM

'தினமலர்' நாளிதழ், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் சார்பில், 'பள்ளி வழிகாட்டி 2025' நிகழ்ச்சி, கோவை அவிநாசி ரோடு சுகுணா திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது.
சிறந்த பள்ளியை பெற்றோருக்கு அடையாளம் காண்பித்து உதவும் வகையில், 'பள்ளி வழிகாட்டி' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஏராளமான பள்ளிகள் இந்நிகழ்ச்சியில், அரங்குகள் அமைத்துள்ளன. நேற்று துவங்கிய இந்நிகழ்ச்சியில், பெற்றோர் திரளாக வந்திருந்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டம், ஆசிரியர்கள் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தனர்.
தரமான கல்விக்கு முக்கியத்துவம்
தினமலர் நாளிதழின் பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி, இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்று. இளம் பெற்றோரின் ஆவல், தங்களது குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதே. அதற்கு வழிவகை செய்கிறது, பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி. ஒவ்வொரு பள்ளியும் தங்கள் தனித்திறன்களை, இங்குள்ள அரங்குகள் வாயிலாக வெளிப்படுத்துகின்றன. பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்பதன் வாயிலாக, குழந்தைக்கு எது சிறந்ததோ அதை வழங்க முடியும். எங்கள் பள்ளியில் தரமான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
-மோகன்தாஸ் அறங்காவலர் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள்
தன்னம்பிக்கை வளர்ப்பு
நேஷனல் மாடல் பள்ளிகள், 1987 முதல் செயல்பட்டு வருகின்றன. சமூகத்தில் நல்ல குடிமகனாக இருக்க எங்கள் பள்ளி, மாணவர்களை பயிற்றுவிக்கிறது. கராத்தே, யோகா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு கலைகள், எங்கள் பள்ளி கால அட்டவணையிலேயே இடம் பெற்றுள்ளன. இந்த கலைகள், மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. அனைத்து விதமான பாடத்திட்டங்களும் உள்ளன. எங்கள் 'கிண்டர் கார்டன்' பள்ளிகள் ஆர்.எஸ்.புரம், காந்திமாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துவங்கப்பட்டுள்ளது. நீட், ஜே.இ.இ., கேட் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி தேர்வுகளை, எழுதும் மாணவர்களுக்கு தேவையான பயிற்சி, 'நிக்வின்ஸ்' பயிற்சி மையத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது.
-கீதா முதல்வர் நேஷனல் மாடல் சீனியர் செக்கண்டரி ஸ்கூல்
தனித்திறன் வளர்க்க முக்கியத்துவம்
எங்கள் பள்ளியில் ஒவ்வொரு ஆசிரியரும், மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்துகின்றனர். கற்றலில் உள்ள தேக்கத்தை போக்க, முற்றிலும் வித்தியாசமான முறையில் கற்பிக்கின்றனர். அத்துடன், சமூகத்தின் மீது மாணவர்களுக்கு அக்கறை ஏற்படும் வகையில் கல்வி போதிக்கப்படுகிறது. அனைத்து திறன்களிலும் மாணவர்கள் திறம்பட செயல்படும் வகையில் பயிற்றுவிக்கப்படுகிறது. கல்வி தவிர, தனித்திறன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
-பத்மினி முதல்வர், அத்வைத் தாட் அகாடமி
தலைமைப்பண்புக்கு முக்கியத்துவம்
எங்கள் பள்ளியில் ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட பாடத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடத்திட்டமும், தனித்துவத்துடன் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறனுக்கு ஏற்ப, அவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. தனித்திறன்களை கண்டறிந்து அதை வளர்க்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நடைமுறையில் எவ்வாறு, தலைமைப்பண்பை அடைய முடியும் என்பதை செயல்முறையாக பயிற்றுவிக்கப்படுகிறது.
-தான்யா ஆரம்பப்பள்ளி ஒருங்கிணைப்பாளர், மான்செஸ்டர் சர்வதேச பள்ளி.
சாதனையாளர்களாக மாற்றுகிறோம்
இன்றைய காலகட்டத்தில், மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி மிகவும் முக்கியம். குழந்தைகள் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இதன் அடிப்படையில், எங்களது கல்வி உள்ளது. 15 ஆண்டுகளாக கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது, ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தை புகுத்தியுள்ளோம். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டமும் பயிற்றுவிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையையும், தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றுவதுடன், தலைமைப்பண்பு உடையவர்களாகவும்மாற்றுகிறோம். கல்வி தவிர, விளையாட்டு, தனித்திறன்களை வளர்த்து, அவரவர் துறையில் சாதனையாளர்களாக மாற்றி வருகிறோம்.
-அத்ருக்சனா பாலகிருஷ்ணன்நிர்வாகி, பிரிட்ஜ்வுட்ஸ் சர்வதேச பள்ளி.