/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிக ஒலி ஏற்படுத்தும் பட்டாசு தவிர்க்க பள்ளியில் உறுதிமொழி
/
அதிக ஒலி ஏற்படுத்தும் பட்டாசு தவிர்க்க பள்ளியில் உறுதிமொழி
அதிக ஒலி ஏற்படுத்தும் பட்டாசு தவிர்க்க பள்ளியில் உறுதிமொழி
அதிக ஒலி ஏற்படுத்தும் பட்டாசு தவிர்க்க பள்ளியில் உறுதிமொழி
ADDED : அக் 19, 2025 10:59 PM

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், விபத்து இல்லாத தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை உறுதிப்படுத்த, மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரகுநாதன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாசினை குறைப்போம், சுற்றுச் சூழலை காப்போம், அதிக அளவில் மாசு, ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்ப்போம். பெரியவர்கள் உடன் இருக்க பட்டாசுகளை வெடிப்போம், குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்ப்போம், மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், சரணாலயங்கள் அமைந்துள்ள அமைதியான பகுதிகளில், பட்டாசு வெடிப்பதை தவிர்ப்போம், அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை வெடிப்போம் என, மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர்.