/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி 'ரெட் ரிப்பன் கிளப்' செயல்பாடின்றி முடக்கம்
/
பள்ளி 'ரெட் ரிப்பன் கிளப்' செயல்பாடின்றி முடக்கம்
ADDED : செப் 03, 2025 10:54 PM
பொள்ளாச்சி; அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில், 'ரெட் ரிப்பன் கிளப்' செயல்பாடின்றி முடங்கி உள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பாடத்திட்டம் தவிர்த்து, சமூக சிந்தனையுள்ள பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் நோக்கில், மன்றங்கள் துவங்கப்படுகின்றன. குறிப்பாக, தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், ரெட் ரிப்பன் கிளப், பசுமைப்படை உள்ளிட்ட இயக்கங்கள் வாயிலாக, பள்ளி வளாக துாய்மை, பிறருக்கு உதவுதல், சமூக விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், பல பள்ளிகளில் இத்தகைய மன்றங்களின் செயல்பாடுகள் பெயரளவில் மட்டுமே உள்ளது. அதிலும், 'ரெட் ரிப்பன் கிளப்' செயல்பாடுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லையென புகார் எழுகிறது.
கல்வியாளர்கள் கூறியதாவது: பள்ளிகளில், 'ரெட் ரிப்பன் கிளப்' செயல்பாடுகளை வலுவூட்ட பள்ளிக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. அதன் வாயிலாக மாணவர்களிடையே சுயஒழுக்கம், கீழ்படிதல், பிறருக்கு உதவுதல், பொது சேவையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பண்புகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இந்த மன்றத்தின் செயல்பாடு முடங்கியுள்ளது. அதனை வலுவூட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முனைப்பு காட்ட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.