ADDED : டிச 07, 2024 05:57 AM

பெ.நா.பாளையம்; பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின விழா நடந்தது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியை கோமதி, விளையாட்டு துறையின் சாதனைகளை ஆண்டு அறிக்கையாக வாசித்தார். தம்பு பள்ளியின் முன்னாள் மாணவர் செல்வராஜ் பேசுகையில், ''மாணவர்கள் விளையாட்டு ஆனாலும், வாழ்க்கை ஆனாலும் தனக்காக ஒரு இலக்கை வகுத்துக் கொண்டு, அதை நோக்கி பயணிக்க வேண்டும்'' என்றார்.
விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விளையாட்டு தின விழாவில், அக்னி, ஆகாஷ், ப்ரீத்திவி, திரிசூல் என அணிகள் பிரிக்கப்பட்டு, மாணவ, மாணவர்களிடையே தொடர் ஓட்டம், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள், நடந்தன.
நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி, கல்வி இயக்குனர் குணசேகர், இளநிலை உதவி தலைமை ஆசிரியர் உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.