/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவ தலைவர்கள் பொறுப்பேற்பு விழா
/
பள்ளி மாணவ தலைவர்கள் பொறுப்பேற்பு விழா
ADDED : ஜூலை 12, 2025 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; போத்தனுார், செட்டிபாளையம் அவதார் பப்ளிக் பள்ளியில், மாணவ தலைவர்கள் பதவியேற்பு விழா நடந்தது.
பள்ளி மாணவ தலைவர், தலைவி மற்றும் விளையாட்டுதுறை தலைவர், தலைவி உள்பட பல்வேறு குழுக்களின் தலைவர்கள் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் செந்தில்குமார், செயலாளர் அருள் பிரகாசம் ஆகியோர் பதவி பொறுப்புகளை வழங்கினர். பள்ளி முதல்வர் ரம்யா வழிகாட்ட, மாணவர்கள் தங்கள் கடமைகளை உறுதிமொழியாக ஏற்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.