/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கிரிஷ் அத்லெடிக்-25' போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் 'சபாஷ்'
/
'கிரிஷ் அத்லெடிக்-25' போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் 'சபாஷ்'
'கிரிஷ் அத்லெடிக்-25' போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் 'சபாஷ்'
'கிரிஷ் அத்லெடிக்-25' போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் 'சபாஷ்'
ADDED : பிப் 10, 2025 06:13 AM

கோவை, : ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வி துறை சார்பில், மாவட்ட அளவிலான 'கிரிஷ் அத்லெடிக்-25' போட்டி நடந்தது.
இதில், 14, 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்களுக்கு, 100 மீ., 200 மீ., 400 மீ., 600 மீ., நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ., தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன. தடகள வீரர்கள் ஏதேனும் இரு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்கள் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில், 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், கமலக்கண்ணன், தர்சந்த் ஆகியோரும், மாணவியர் பிரிவில் ஆர்வலீன் ஜென்னிதா பேட்ரிசியாவும், 17 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் அம்ரித் ஹிங்கோரனி, ஜான் ஆல்பின் ஆகியோரும், மாணவியர் பிரிவில் இனியா ஸ்ரீ, சுசித்ரா ஆகியோரும் தனி நபர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.