/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு துவங்க பள்ளி மாணவர்கள் ஆர்வம்
/
அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு துவங்க பள்ளி மாணவர்கள் ஆர்வம்
அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு துவங்க பள்ளி மாணவர்கள் ஆர்வம்
அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு துவங்க பள்ளி மாணவர்கள் ஆர்வம்
ADDED : செப் 20, 2024 10:08 PM

வால்பாறை : அஞ்சலகங்களில் புதிய கணக்கு துவங்க, பள்ளி மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வால்பாறை அஞ்சலகத்தில் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக தபால் துறை, செல்வமகள் சேமிப்பு திட்டத்தை கடந்த, 2015ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் பெயரில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் கணக்கு துவங்கலாம்.
இது தவிர, பள்ளி மாணவர்கள் நலன் கருதி பெற்றோர்கள் அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு கணக்கு துவங்கியுள்ளனர். தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற வசதியாக, மாணவர்கள் அஞ்சலகங்களில் நேரடியாக சேமிப்பு கணக்கை துவங்கியுள்ளனர்.
வால்பாறை போஸ்ட் மாஸ்டர் கீதாஞ்சலி கூறியதாவது:
பொள்ளாச்சி தபால் கோட்டகண்காணிப்பாளர் சாந்தினிபேகம் உத்தரவின் பேரில், பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், மத்திய, மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை எளிதில் பெற வசதியாக அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு கணக்கு துவங்கப்பட்டுள்ளது.
வால்பாறை மலைப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும், சிறுசேமிப்பு கணக்கு துவங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுதவிர, செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர பெண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும், இன்சூரன்ஸ், டெபாசிட், சிறுசேமிப்பு கணக்குகளை துவங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், 500 ரூபாய் செலுத்தி புதிய கணக்கு துவங்கலாம். அவர்களுக்கு உடனடியாக க்யூ.ஆர்.,கோடுடன் கூடிய ஏ.டி.எம்., கார்டு வழங்கப்படும்.
இவ்வாறு, கூறினார்.