/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய திறனறி தேர்வில் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி
/
தேசிய திறனறி தேர்வில் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி
ADDED : ஏப் 17, 2025 11:08 PM

சூலுார், ; தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் அரசூர்,செல்லப்பம்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் ஆறு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில், திறமையான மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக, மத்திய அரசு தேசிய வருவாய் வழி திறனறி தேர்வை நடத்தி வருகிறது.
இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு, 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகை அம்மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கிறது.
இந்தாண்டு நடந்த தேர்வில், அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அய்யம்பெருமாள், துஷ்யந்த், சங்கரா மற்றும் மாணவி கனிஷ்கா ஆகியோர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியர் கண்ணன், மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர். இதேபோல், செல்லப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தரண், கிரி ஆகியோர் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். அவர்களை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
அன்னுார்
அன்னூர் வட்டாரத்தில் ஐந்து பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாசாணி தங்கம், ரித்திகா ஆகிய இருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த நவநீதன், தேசிகா, ரேஷ்மா ஆகிய மூவர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.