/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைக்கு எதிராக பள்ளி மாணவர்கள் பேரணி
/
போதைக்கு எதிராக பள்ளி மாணவர்கள் பேரணி
ADDED : நவ 12, 2024 08:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; போதைக்கு எதிராக தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பேரணி நடத்தினர்.
சூலுார் போலீசார், கலங்கல் ரோடு அனுகிரஹா சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில், போதை பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிராக பேரணி சூலுாரில் நடந்தது. பேரூராட்சி அலுவலகம் முதல் பஸ் ஸ்டாண்ட் வரை நடந்த பேரணியில், போதை பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவியர் ஏந்தி சென்றனர்.
நாங்களும் பயன்படுத்த மாட்டோம்; நீங்களும் பயன்படுத்தாதீர் என, கோஷங்களை எழுப்பினர். போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பள்ளி தாளாளர் ஷோபா, எஸ்.ஐ.,மோகன்தாஸ், ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.

