/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி
/
பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி
ADDED : மார் 05, 2026 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் தினகரன் தலைமை வகித்தார். கண்காட்சியில், அறிவியல் அறிஞர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றன. மேலும், மாணவர்களின் பல்வேறு அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
எரிமலை வெடிப்பு, நுரையீரல் வேலை செய்யும் முறை, காற்றின் அழுத்தம், மெழுகுவர்த்தி எரிய ஆக்சிஜன் தேவை, ஒளி பிரதிபலிப்பு உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் இடம் பெற்றன. இது குறித்து பெற்றோருக்கு மாணவர்கள் விளக்கினர். பள்ளி ஆசிரியர் சத்தியா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

