/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யோகாவில் உலக சாதனை; பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
யோகாவில் உலக சாதனை; பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : நவ 03, 2025 09:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை:  ஆனைமலை அருகே, பாரஸ்ட் ஹில்ஸ் அகாடமி பள்ளி மாணவர்கள், உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதுார் பாரஸ்ட் ஹில்ஸ் அகாடமி பள்ளியில், குளோபல் உலக சாதனை நிகழ்வு நடந்தது.அதில், பரிவர்த்தன பத்மாசனா, பத்த பத்மாசனம், புஜங்காசனாவில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, 15 நிமிடங்கள் தொடர்ந்து உடல் அசைவின்றி யோகா செய்து, குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
யோகா பயிற்சியாளர் கிருஷ்ணராஜ் பயிற்சி அளித்தார். பள்ளியின் தாளாளர் பரணி, முதல்வர் உமா மகேஸ்வரி, மாணவர்களை பாராட்டினர்.

