/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எதிரணியை துவம்சம் செய்த பள்ளி மாணவர்கள்; டிராபியை வென்ற எஸ்.வி.ஜி.வி.,-பி.எஸ்.ஜி.ஆர்.,

ADDED : ஜூன் 30, 2025 10:50 PM

கோவை; மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான, 30வது 'சி.எம்.எஸ்., டிராபி' வாலிபால் போட்டி, கணபதி சி.எம்.எஸ்., பள்ளியில் இரு நாட்கள் நடந்தது. 19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், 25 அணிகளும், மாணவியர் பிரிவில், 16 அணிகளும் பங்கேற்றன.
'நாக் அவுட்' மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடந்தன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், காரமடை எஸ்.வி.ஜி.வி., அணியும், கோவை கிரசன்ட் பள்ளி அணிகளும் மோதின.
துவக்கம் முதலே, இரு அணி வீரர்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுறுசுறுப்புடன் விளையாடிய எஸ்.வி.ஜி.வி., அணியினர், 25-21, 25-22 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டினர்.
மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், ஏ.பி.சி., பள்ளி அணியும், சி.எம்.எஸ்., பள்ளி அணியும் மோதின. இதில், ஏ.பி.சி., அணியினர், 25-21, 25-22 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
அதேபோல், மாணவியருக்கான போட்டியில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளி அணி, 25-18, 25-19 என்ற புள்ளிகளில் காரமடை எஸ்.வி.ஜி.வி., பள்ளி அணியை வென்று முதல் பரிசை தட்டியது.
மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், விவேகம் அணியானது, 25-16, 25-17 என்ற புள்ளிகளில் சி.எம்.எஸ்., அணியை வீழ்த்தி மூன்றாம் பரிசு வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.