/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொழி படைப்பாற்றலில் சாதித்த பள்ளி மாணவர்கள்
/
மொழி படைப்பாற்றலில் சாதித்த பள்ளி மாணவர்கள்
ADDED : ஜூலை 21, 2025 10:47 PM

கோவை; பன்னீர்மடை அக்சயா அகாடமி சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில், 46வது கோவை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான தமிழ் மற்றும் ஹிந்தி மொழி படைப்பாற்றல் போட்டி நடந்தது.
அக்சயா கல்வி குழுமத்தின் செயலாளர் பட்டாபிராம், போட்டிகளை துவக்கி வைத்தார். 55க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து, 350 மாணவர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் நடுவர்களாக இருந்து, சிறந்த மாணவர்களை தேர்வு செய்தனர். பள்ளியின் செயலாளர் பட்டாபிராம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
நிகழ்வில், அக்சயா கல்வி குழுமத்தின் நிறுவனர் புருஷோத்தமன், பள்ளியின் தாளாளர் சுந்தராம்பாள், முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

