/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட டேக்வோண்டா போட்டி : பள்ளி மாணவிகள் அசத்தல்
/
மாவட்ட டேக்வோண்டா போட்டி : பள்ளி மாணவிகள் அசத்தல்
ADDED : அக் 16, 2025 08:59 PM

கோவை: வருவாய் மாவட்ட அளவிலான டேக்வோண்டா போட்டிகளில் பல்வேறு பள்ளியின் மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
மாவட்ட அளவிலான டோக்வோண்டா போட்டிகள், ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில் கடந்த இரு தினங்களாக நடந்தது. இதில், மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவியர், 14 வயது பிரிவு 20 கிலோ எடை பிரிவில் நடந்த போட்டியில், சி.சி.எம்.ஏ., பள்ளி மாணவி, ராஜவைஷ்ணவி முதலிடம் பிடித்தார். ஒப்பணக்கார வீதி, மாநகராட்சி பள்ளி மாணவி, ஆன்ட்ரியா, இரண்டாம் இடம் பிடித்தார்.
22 கிலோ எடைபிரிவு போட்டியில், சி.சி.எம்.ஏ., பள்ளி மாணவி, யோஸ்ரீ முதலிடம் பிடித்தார். வி.எல்.பி.ஜானகியம்மாள் பள்ளி மாணவி, அக்சிதா இரண்டாம் இடம் பிடித்தார்.
24 கிலோ எடை பிரிவில், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி மாணவி சந்தோஷினி முதலிடம் பிடித்தார்.
26 கிலோ எடை பிரிவில், சி.சி.எம்.ஏ., பள்ளி மாணவி, கனிஷ்கா, வி.எல்.பி.ஜானகியம்மாள் பள்ளி மாணவி, கீர்ஷம், முதல் இரு இடங்களை பிடித்தனர்.
29 கிலோ எடை பிரிவில் பி.வி.பி., பள்ளி மாணவி அதிதி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி, தீபிகா முறையே முதல் இரு இடங்களை பிடித்தனர்.
32 கிலோ எடைப்பிரிவில் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவி அஸ்மிதா முதல் இடம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி, ஸ்ரீ வைஷ்ணவி இரண்டாம் இடம் பிடித்தனர்.
மாணவியர்,17 வயது பிரிவு 32 கிலோ எடை பிரிவில், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பள்ளி மாணவி இந்துமதி முதல் இடம், ஏ.வி.பி., பள்ளி மாணவி ரித்திகா இரண்டாம் இடம், கே.கே.புதுார் மாநகராட்சி பள்ளி மாணவி யோகலட்சுமி மூன்றாம் இடம் பிடித்தனர்.
35 கிலோ எடை பிரிவில், மாரண்ண கவுடர் பள்ளி மாணவி ரித்திகா முதல் இடம், சி.சி.எம்.ஏ., பள்ளி மாணவி அம்ரின் பாத்திமா இரண்டாம் இடம், மாரண்ண கவுடர் பள்ளி மாணவி அக்சிதா மூன்றாம் இடம் பிடித்தனர்.
38 கிலோ எடை பிரிவில், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவி, அன்சிதா, ஸ்ரீ நாராயண மிஷன் பள்ளி மாணவி பிரதிக்சா, வாசவி வித்யாலயா பள்ளி மாணவி ஸ்ரீ சாரு ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
42 கிலோ எடை பிரிவில், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவி, அனுஷ்கா முதல், நிர்மலா பள்ளி மாணவி, செலினா ஜானே இரண்டாம் இடம் பிடித்தனர்.
40 கிலோ எடை பிரிவில், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பள்ளி மாணவி, கனிஷ்கா, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மாணவி, கவிபாரதி ஆகியோர் முதல் இரு இடங்களை பிடித்தனர்.
42 கிலோ எடைப்பிரிவில் வித்ய விகாசினி பள்ளி மாணவி, கேஷிகா முதல் இடம், மாநகராட்சி எஸ்.ஆர்.பி., அம்மணி அம்மாள் பள்ளி மாணவி சிஜூ ஜெல்துரு இரண்டாம் இடம், சி.சி.எம்.ஏ., பள்ளி மாணவி தீனா பெர்னாட்ஷா மூன்றாம் இடம் பிடித்தனர்.
44 கிலோ எடைப்பிரிவில், சி.சி.எம்.ஏ., பள்ளி மாணவி தனுஜா முதல் இடம் பிடித்தார்.
46 கிலோ எடைப்பிரிவில் சி.சி.எம்.ஏ., பள்ளி மாணவி, ஷபா பாத்திமா முதல் இடம், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பள்ளி மாணவி, ஜமுனா ஹசீன் இரண்டாம் இடம், ஸ்ரீ நாராயணா மிஷன் பள்ளி மாணவி கிருத்திகா மூன்றாம் இடம் பிடித்தனர்.