ADDED : அக் 07, 2024 12:49 AM
அ நிறம் | அளவு
கோவை : மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ்1, பிளஸ்2 பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு, கடந்த செப்., 18ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, ஆறு முதல், 10ம் வகுப்புக்கு, 20ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடந்தது. இதையடுத்து, கடந்த, 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்று, நேற்று வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் பள்ளி வகுப்பறைகள், கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டன. கட்டடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
