/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர் அதிகம் உள்ள பள்ளிகளே முதல் தேர்வு
/
மாணவர் அதிகம் உள்ள பள்ளிகளே முதல் தேர்வு
ADDED : ஜூலை 08, 2025 09:59 PM
கோவை; மாநிலம் முழுவதும் இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளே, பெரும்பாலான ஆசிரியர்களின் தேர்வாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் உட்பட, பல்வேறு பகுதிகளில் துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு, ஜூலை 19ம் தேதி தொடங்கி ஜூலை 23ம் தேதிக்குள்ளும், பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு ஜூலை 24ம் தேதி தொடங்கி, ஜூலை 30ம் தேதியுடனும் முடிவடைகிறது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு, ஜூலை 8 முதல் 11 வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், தற்போது நடக்கும் கலந்தாய்வில், நகர்ப்புறம் மற்றும் உள்வட்டாரத்தில் அமைந்துள்ள, மாணவர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் அதிக விருப்பம் தெரிவிப்பது தெரியவந்துள்ளது.
ஆசிரியர்கள் கூறுகையில், 'மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் உபரி ஆசிரியர் நிலை உருவாகும். இதனால் அந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பிற இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட நேரிடும்.
இது, பணியின் நிலைத்தன்மையை பாதிக்கக்கூடும். அதனால், அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளை தேர்வு செய்து, பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்புகிறோம்' என்றனர்.