ADDED : பிப் 28, 2026 05:56 AM
அ நிறம் | அளவு
கோவை: பாரதியார் பல்கலையில் தேசிய அறிவியல் தின கொண்டாட்டங்கள், டாக்டர் உஷா கீர்த்திலால் மேத்தா அரங்கில் இன்று நடக்கிறது.
'அறிவியலில் பெண்கள்' என்ற தலைப்பில், 'விக்சித் பாரதத்தை ஊக்குவிப்பது' என்ற கருப்பொருளில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இக்கொண்டாட்டங்கள் அரசு உயர்கல்வித் துறை செயலர், மற்றும் துணைவேந்தர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சங்கர் தலைமையில் நடக்கிறது.
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் துணைவேந்தர்கள் அண்ணாமலை மற்றும் மணியன், பெரியார் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் குழந்தைவேல், திருவள்ளுவர் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
