தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அறிவியல், பொறியியல் கண்காட்சி  மாணவர்களின் படைப்பு அணிவகுப்பு

அறிவியல், பொறியியல் கண்காட்சி  மாணவர்களின் படைப்பு அணிவகுப்பு

அறிவியல், பொறியியல் கண்காட்சி  மாணவர்களின் படைப்பு அணிவகுப்பு


ADDED : மார் 06, 2024 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 01:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் நடக்கும், அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில், இரு தினங்கள் நடக்கும் 'அன்வேஷனா- அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி' நேற்று துவங்கியது. அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷனுடன் இணைந்து நடத்தப்படும் இக்கண்காட்சியில், மாவட்ட கல்வி அலுவலர் கேசவகுமார், பெங்களூரு அகஸ்தியர் சர்வதேச அறக்கட்டளை பொது மேலாளர் அரளகுப்பே நாகேஷ்ராமச்சந்திரா, மூத்த மேலாளர் டோபாஸ், பி.ஏ.பி., திட்ட செயற்பொறியாளர் காஞ்சித்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், 'அன்வேஷனா' என்பது பொறியியல் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, கண்டுபிடிப்புகளை உருவாக்க அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொறியியல் மாணவர்கள் வழிகாட்டியாகவும், பள்ளி மாணவர்கள் கற்று கொள்பவர்களாகவும் பங்காற்றி வருகின்றனர்.

இத்திட்டத்தின் வாயிலாக பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் துாண்டி, புரிதலை மேம்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என, தெரிவிக்கப்பட்டது.

என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராமசாமி, கல்லுாரி 'டீன்'கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us