/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : ஆக 22, 2025 11:28 PM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் கே. ரங்கசாமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் சார்பில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களின் அடிப்படையில் அறிவியல் மாதிரி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகளை இப்பள்ளியின் குழந்தைகள் பார்வைக்கு வைத்து இருந்தனர்.
நிகழ்ச்சியில், கே.ரங்கசாமி நாயுடு அண்ட் சன்ஸ் அறக்கட்டளை தலைவர் துரைசாமி, தாளாளர் சித்ரா பாலசுப்பிரமணியம், செயலாளர் ஸ்ரீ லதா ஜெகநாதன், தலைமை ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.