/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவியல், தொழில்நுட்பம், தர நிர்ணயம் கொடிசியா கண்காட்சியில் தத்ரூபம்

ADDED : பிப் 02, 2025 01:20 AM

கோவை: கோவையில் அறிவியல் மற்றும் தர நிர்ணய கண்காட்சி, நேற்று நடந்தது.
கோவையில் இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ. எஸ்.,) நடத்திய ஒரு நாள் அறிவியல் மற்றும் தர நிர்ணய கண்காட்சி, கொடிசியா தொழிற்காட்சி அரங்கில் நேற்று நடந்தது. பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன.
சேலம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நிறுவனமான செயில், பாத்திரங்களை காட்சிப்படுத்தியிருந்தது. பம்ப் பரிசோதனை நிறுவனமான சிடார்க், தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனம் சிட்ரா உள்ளிட்டவை, கண்காட்சியில் அரங்குகள் அமைத்திருந்தன.
துவக்க விழாவில், இந்திய தர நிர்ணய நிறுவனமான பி.ஐ.எஸ்., கோவை கிளையின் தலைவர் கோபிநாத் வரவேற்றார்.
குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியின் இயக்குனர் ரகுபதி பேசுகையில், அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முறையே, புதிய கண்டுபிடிப்புகளாக உருவாகின்றன. மனிதனின் ஆற்றல் மகத்தானது என்பதை, தொழில்நுட்பங்கள் நமக்கு உணர்த்தி வருகின்றன, என்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மித்ரன் கட்டமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயகோபால், தர நிர்ணயத்தின் அவசியம், பயன்பாடுகள் பற்றி விளக்கினார். இந்திய தர நிர்ணய அமைவனத்தின் இணை இயக்குனர் ரினோ ஜான் நன்றி தெரிவித்தார்.