/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்கூட்டர் டெலிவரி தாமதம்; இழப்பீடு வழங்க உத்தரவு
/
ஸ்கூட்டர் டெலிவரி தாமதம்; இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : அக் 15, 2024 07:00 AM
கோவை : கோவை, நஞ்சுண்டாபுரம் ரோட்டைச் சேர்ந்த பைரோஸ்ராஜன், பெங்களூரு ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் வாங்குவதற்காக, 2023, செப்., 1ல் ஆன்லைன் வாயிலாக, முன்பதிவு செய்தார்.
ஸ்கூட்டருக்கான தொகை, 1.67 லட்சம் ரூபாய், காப்பீடு தொகை 6,199 ரூபாய் அனுப்பினார். விரைவில் வீட்டு முகவரிக்கு, ஸ்கூட்டர் அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். இரு மாதங்களுக்கு மேலாகியும், ஸ்கூட்டரை டெலிவரி செய்யாமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தனர். இதனால், முன்பதிவை ரத்து செய்து விட்டு, பணத்தை திரும்பித் தருமாறு நோட்டீஸ் அனுப்பினார்; பதில் இல்லை. பாதிக்கப்பட்ட பைரோஸ்ராஜன், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'ஓலா நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மின்சார ஸ்கூட்டருக்கு மனுதாரரிடம் பெற்ற தொகை, 1.67 லட்சம் ரூபாய், காப்பீட்டிற்கு பெற்ற தொகை, 6,199 ரூபாயை 9 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.
மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.