சாரண, சாரணியர் இயக்கம் ஆளுநர் விருதுக்கு பயிற்சி
சாரண, சாரணியர் இயக்கம் ஆளுநர் விருதுக்கு பயிற்சி
ADDED : மார் 06, 2026 05:05 AM

அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில் சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில், ஆளுநர் விருதுக்கான பயிற்சியில், 170 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், பாரத சாரண, சாரணியர்களுக்கு ஆளுநர் விருதுக்கான பயிற்சி நடந்தது. பயிற்சி முகாமை கல்லுாரி முதல்வர் கோபி, இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சாரண, சாரணியர் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்றார்.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் பயிற்சியில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 170 மாணவ, மாணவியர் கலந்து கொள்கின்றனர். பயிற்சியில் சாரண ஒழுக்கம், சாரண பாடல், உடற்பயிற்சியை ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தனர்.
முகாமில், மாவட்ட பொருளாளர் முத்தையா, சாரண ஆசிரியர்கள் ரூத்பேபி, ராகவன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
