தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆர்த்தோ பிரச்னைகளுக்கு 'ஸ்கிரைப்' சலுகை இப்போது இல்லை

 ஆர்த்தோ பிரச்னைகளுக்கு 'ஸ்கிரைப்' சலுகை இப்போது இல்லை

 ஆர்த்தோ பிரச்னைகளுக்கு 'ஸ்கிரைப்' சலுகை இப்போது இல்லை


ADDED : ஜன 16, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மண்டல மருத்துவ குழு சார்பில், பொதுத்தேர்வு எதிர்கொள்ளும், 500 மாணவர்களுக்கு இதுவரை ஸ்கிரைப் மற்றும் கூடுதல் நேர சலுகை வழங்கப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனையில் உள்ள மண்டல மருத்தவ குழு சார்பில், பள்ளி பொதுத்தேர்வு, கல்லுாரி, அரசு தேர்வுகளில் ஸ்கிரைப் உதவி தேவைப்படுபவர்களுக்கு பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்குகின்றனர். தவிர, அரசு ஊழியர்கள் விடுமுறை, நீதிமன்றம் சார்ந்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக பொதுத்தேர்வு எதிர்கொள்ளும் மாணவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, அரசு மருத்துவமனை மருத்துவக்குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் கூறுகையில், '' இதுவரை, 500 பள்ளி மாணவர்களுக்கு ஸ்கிரைப் தேவைக்கான பரிசோதனை செய்து மருத்துவ ஒப்புதல் சான்று வழங்கியுள்ளோம். சிலருக்கு ஸ்கிரைப் தேவைப்படும், சிலருக்கு கூடுதலாக நேரம் தேவைப்படும். தேவைக்கு ஏற்ப மருத்துவ காரணத்தை மையமாக கொண்டு வழங்கப்பட்டுள்ளது.

''பள்ளி வகுப்பாசிரியர், தலைமையாசிரியர் பரிந்துரையின் பேரில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். பல்வேறு கட்ட பரிசோதனைகள் செய்யப்படும் என்பதால், எளிதாக சான்றிதழ் பெற இயலாது; தகுதியானவர்கள் மட்டுமே பெற இயலும். மாற்றுத்திறனாளிகளுக்கு இப்பரிசோதனை தேவையில்லை, அரசு அடையாள அட்டை இருந்தால் போதுமானது, '' என்றார்.

மருத்துவ குழு ஆர்த்தோ பிரிவு உறுப்பினர் டாக்டர் பத்மராணி கூறுகையில், ''எலும்பு முறிவு சார்ந்த பிரச்னைகளுக்கு தற்போது பரிசோதனை செய்ய இயலாது. எலும்பு முறிவு சரியாகக்கூடிய பிரச்னை என்பதால், தேர்வுக்கு சில நாட்கள் முன்னரே பரிசோதனை செய்து சான்று வழங்குவோம்.

''தற்போது, அறிவுசார் அதாவது ஐ.க்யூ., குறைபாடுள்ள மாணவர்களுக்கு பரிசோதனை நடக்கிறது. 100 பேரில், 3 பேர் வேண்டுமென்ற கையை உடைத்துக்கொண்டும், காலில் அடிப்பட்டு உள்ளதால் ஸ்கிரைப் வேண்டும் என்றும், கையில் வலி என்று பல்வேறு காரணங்கள் கூறி வருவார்கள். பரிசோதனையில் இவை தெளிவாக தெரிந்துவிடும், மாவுகட்டாக இருந்தாலும் பிரித்து எக்ஸ்.ரே., எடுத்து அனைத்து பரிசோதனையும் செய்தே சான்றிதழ் வழங்குவோம். ஆர்த்தோ சார்ந்த பிரச்னைகளுக்கு தற்போது சான்று வழங்கவில்லை,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us