/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை வழக்கில் ஆயுள் சிறை; எஸ்.சி.,எஸ்.டி., கோர்ட் தீர்ப்பு
/
கொலை வழக்கில் ஆயுள் சிறை; எஸ்.சி.,எஸ்.டி., கோர்ட் தீர்ப்பு
கொலை வழக்கில் ஆயுள் சிறை; எஸ்.சி.,எஸ்.டி., கோர்ட் தீர்ப்பு
கொலை வழக்கில் ஆயுள் சிறை; எஸ்.சி.,எஸ்.டி., கோர்ட் தீர்ப்பு
ADDED : ஏப் 15, 2025 11:36 PM
கோவை; ஓரின சேர்க்கைக்கு வர மறுத்தவரை, கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை அளித்து கோவை, எஸ்.சி., எஸ்.டி., கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
கோவை, இடையர்பாளையம் பகுதியில் உள்ள, ஒரு டீக்கடையில் வேலை செய்து வந்த திருநெல்வேலியை சேர்ந்த பாக்கியராஜ், 2021ம் ஆண்டு சாய்பாபா காலனி அருகில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
சாய்பாபா காலனி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது, இடையர்பாளையம், சரவணா நகரை சேர்ந்த மணி ஜோசப், 52 என்பவர் 2021ம் ஆண்டு, ஆக., 29ம் தேதி இரவு, குடிபோதையில் நின்று கொண்டிருந்த பாக்கியராஜை, ஓரின சேர்க்கைக்கு அழைத்து, அவர் மறுத்ததால் அவரை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கு, கோவை எஸ்.சி.,எஸ்.டி., கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், கொலை குற்றவாளி மணி ஜோசப்புக்கு, ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.