/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகையிலைப்பொருள் விற்ற கடைகளுக்கு 'சீல்'
/
புகையிலைப்பொருள் விற்ற கடைகளுக்கு 'சீல்'
ADDED : பிப் 01, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கடந்த மூன்று மாதங்களில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த, 363 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
குட்கா, பான்பராக் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையை தடுக்க, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், போலீசார், உணவுப்பாதுகாப்பு துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரின் கடைகள், 'சீல்' வைக்கப்படுகின்றன.
அபராதமும் விதிக்கப்படுகிறது. கடந்தாண்டு அக்., 29ம் தேதி முதல் ஜன., 30 வரை, 1253.31 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 363 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளதாகவும், உணவுப்பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறினார்.