/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தன்னார்வலர்கள் சார்பில் பள்ளிக்கு இருக்கைகள்
/
தன்னார்வலர்கள் சார்பில் பள்ளிக்கு இருக்கைகள்
ADDED : பிப் 19, 2025 09:19 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, வெள்ளாளபாளையம் பள்ளிக்கு பள்ளி மேலாண்மை குழு, தன்னார்வலர்கள் சார்பில், இருக்கைகள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, வெள்ளாளபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 40 மாணவர்கள் படிக்கின்றனர்.
மாணவர்கள் வசதிக்காக, ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருக்கைகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அருண்குமார் முயற்சியில், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களாக பணியாற்றியவர்கள், கடந்த, 1994ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவன உரிமையாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் என, அனைவரின் பங்களிப்புடன் பெறப்பட்டது.
பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி தலைவர் பத்மபிரியா உதவினார். தலைமையாசிரியர் ரஷியாபீபி நன்றி தெரிவித்தார்.

