இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட்: கோவை அரிமா அணிக்கு வெற்றி
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட்: கோவை அரிமா அணிக்கு வெற்றி
ADDED : ஏப் 27, 2026 10:25 PM
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் இரண்டாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. விஜய் கிரிக்கெட் கிளப் அணியினர் 50 ஓவரில் 204 ரன் எடுத்தனர். அணியின் பிரபு குமார் 63 ரன் எடுத்தார்.
கோவை அரிமா அணியினர் 42 ஓவரில் 208 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். அணியின் பாரதி ராஜா 66, யோகேஸ்குமார் 50 ரன் எடுத்தனர். ஐந்தாவது டிவிஷன் போட்டியில், மார்வெல் கிரிக்கெட் கிளப் அணியினர் 50 ஓவரில் 276 ரன் எடுத்தனர்.
வசந்தம் கிரிக்கெட் கிளப் அணியினர் 44.5 ஓவரில் 148 ரன் எடுத்து தோல்வியடைந்தனர். தம்பி மெமோரியல் கிரிக்கெட் கிளப் அணியினர் 45.2 ஓவரில் 125 ரன் எடுத்தனர். ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் கிளப் அணியினர் 40.3 ஓவரில் 103 ரன் எடுத்து தோல்வியடைந்தனர். எதிரணியின் லம்போதரன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
