/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி; ரெயின்போ, காஸ்மோ அணிகள் வெற்றி
/
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி; ரெயின்போ, காஸ்மோ அணிகள் வெற்றி
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி; ரெயின்போ, காஸ்மோ அணிகள் வெற்றி
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி; ரெயின்போ, காஸ்மோ அணிகள் வெற்றி
ADDED : மார் 30, 2025 11:08 PM
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் டிவிஷன் போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., 'ஏ', எஸ்.என்.எம்.வி., உள்ளிட்ட மைதானங்களில் நடந்து வருகிறது.
இரண்டாவது டிவிஷன் 'யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேஞ்சர்ஸ் லிட்., டிராபி' போட்டியில், காஸ்மோ விலேஜ் கிரிக்கெட் கிளப்யும், ஸ்ரீ ராபர்ட் ஸ்டேன்ஸ் அணியும் மோதின. பேட்டிங் செய்த, காஸ்மோ அணி, 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 210 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக, வீரர் ரியாஷ், 49 ரன்கள், கவுதம், 48 ரன்கள், முகேஷ், 40 ரன்கள் எடுத்தனர். எதிரணி வீரர் ரியாஷ் கான் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய, ஸ்ரீ ராபர்ட் அணி, 36.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எதிரணி வீரர்கள் வசந்த் மற்றும் முகமது அசாருதீன் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். அதேபோல், ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணியும், ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் விளையாடின.
முதலில் பேட்டிங் செய்த, ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணி, 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 236 ரன்கள் எடுத்தது. வீரர் சாதிக் அல் அமீன், 90 ரன்களும், சூர்யகாந்த், 55 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.
237 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் அணி, 38.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. வீரர் சந்தீப் அதிகபட்சமாக, 35 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் ராம்நாரயணன் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகின்றன.