/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட்; 'சதம்' விளாசிய இரண்டு வீரர்கள்
/
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட்; 'சதம்' விளாசிய இரண்டு வீரர்கள்
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட்; 'சதம்' விளாசிய இரண்டு வீரர்கள்
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட்; 'சதம்' விளாசிய இரண்டு வீரர்கள்
ADDED : ஜூலை 21, 2025 10:49 PM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் இரண்டாவது டிவிஷன் போட்டி எஸ்.ஆர்.ஐ.சி.சி., பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. விஜய் கிரிக்கெட் கிளப் அணியும், ஷீ லயன் ரெயின்போ 1972 எம்.எம்.சி.சி., அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த, விஜய் கிரிக்கெட் கிளப் அணியினர், 50 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 233 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் பிரபு குமார், 104 ரன்களும், அருண், 100 ரன்களும் விளாசினர். எதிரணி வீரர் நிதிஷ்குமார் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.
அடுத்து களம் இறங்கிய ஷீ லயன் அணியினர், 46 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 190 ரன்கள் மட்டுமே எடுத்தனர். வீரர்கள் சுகேந்திரன், 46 ரன்களும், கணேஷ்பாபு, 30 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர்களான பரத் மற்றும் சசிக்குமார் ஆகியோர், தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.