தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட்ரெயின்போ 1972 வெற்றி

இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட்ரெயின்போ 1972 வெற்றி

இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட்ரெயின்போ 1972 வெற்றி


ADDED : மார் 12, 2024 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 01:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை;மாவட்ட அளவிலான இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் அருணின் அபார பந்து வீச்சு கைகொடுக்க, ரெயின்போ 1972 அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'யூனிவர்சல் ஹீட் எக்சேஞ்ச் கோப்பைக்கான' இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் ரெயின்போ 1972 எம்.சி.சி., மற்றும் ஸ்ரீ சக்தி கல்லுாரி அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ரெயின்போ அணி, ரங்கநாதன் (37), அருண் (33) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 162 ரன்கள் சேர்த்தது. சக்தி கல்லுாரியின் செஜின் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய சக்தி கல்லுாரி அணியினர் அருணின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அருண் அடுத்தடுத்து விக்கெட்டுளை எடுக்க சக்தி கல்லுாரி அணி 47.5 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், ரெயின்போ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய அருண் ஏழு விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us