ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு நடந்த இரண்டாம் கட்ட பயிற்சி
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு நடந்த இரண்டாம் கட்ட பயிற்சி
ADDED : ஏப் 15, 2026 11:32 PM
அ நிறம் | அளவு
கோவை: ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று நடந்தது. நிர்மலா மகளிர் அறிவியல் கல்லூரி மற்றும் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடந்த இந்த பயிற்சியை, கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷ்னர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
