sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இரண்டாம் நிலை காவலர் தேர்வு; இலவச பயிற்சி பெற அழைப்பு

/

இரண்டாம் நிலை காவலர் தேர்வு; இலவச பயிற்சி பெற அழைப்பு

இரண்டாம் நிலை காவலர் தேர்வு; இலவச பயிற்சி பெற அழைப்பு

இரண்டாம் நிலை காவலர் தேர்வு; இலவச பயிற்சி பெற அழைப்பு


ADDED : செப் 11, 2025 09:23 PM

Google News

ADDED : செப் 11, 2025 09:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; 'இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் காவலர் தேர்வுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு பயிற்சியில் பங்கேற்கலாம்'என, கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் உள்ளிட்ட 3,665 பதவிகளுக்கு, தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடக்கிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதியுடையவர்கள் பங்கேற்கலாம். இப்பயிற்சி வகுப்புகள் ஆங்கிலம், தமிழில் நடத்தப்படும்.

ஸ்மார்ட் போர்டு, இலவச வைபை வசதி, போட்டி தேர்வு புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பயிற்சி அட்டவணை, வாரத்தேர்வுகள், முழுமாதிரி தேர்வு ஆகியவற்றுடன் நடத்தப்படுகிறது. https://tamilnadu careerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக, பாடக்குறிப்புக ளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பங்கேற்க விரும்புபவர்கள், இரண்டு பாஸ்போர்ட் புகைப்படத்துடன், கவுண்டம்பாளையத்தை அடுத்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். விவரங்களுக்கு, 93615 76081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us