/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டம்
/
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டம்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டம்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டம்
ADDED : பிப் 20, 2024 05:15 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமவேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம், நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெற்கு ஒன்றிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் கூறுகையில், 'கோரிக்கைகளை வலியுறுத்தி, தெற்கு ஒன்றியத்தில், 30 இடைநிலை ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.அதில், 10 பேர், சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்; 20 பேர், வேலை புறக்கணிப்பில் உள்ளனர். இதனால், பல பள்ளிகளில், ஓர் ஆசிரியர் மட்டுமே பாடங்களை நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.