UPDATED : அக் 09, 2026 02:50 PM
ADDED : அக் 09, 2026 02:46 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை விமான நிலையத்தில் அவசர காலங்களில், பேரிடர் நிகழ்வுகள், விமான அவசர தரையிறக்கம், வெடிகுண்டு மிரட்டல், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவது குறித்த ஒத்திகை நடந்தது.
நிலைய இயக்குனர் தர்மராஜ் தலைமை வகித்தார். பல பிரிவுகளை சார்ந்த பணியாளர்கள், பாதுகாப்பு படையினர், விமான நிலையத்துக்கு வெளியே உள்ள மருத்துவ உதவி, போக்குவரத்து சீரமைப்பு, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட அம்சங்கள் உடனடியாக செயல்படுகிறதா என்று பரிசோதித்தனர்.
