ADDED : ஜன 08, 2025 11:26 PM
மேட்டுப்பாளையம்; சிறுமுகை வனச்சரகம், 12 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இங்கு சீமை கருவேல முள் மரங்கள் வளர்ந்து, வனப்பகுதியின் நிலப் பகுதிகளை, அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்து இருந்தன. இதனால் மற்ற மரங்கள் வளர முடியாத நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன், சிறுமுகை வனப்பகுதியில், முதல் கட்டமாக, 44 ஹெக்டர் நிலப்பரப்பில் இருந்த, சீமை கருவேல மரங்களை வெட்டி அடுக்கினர். இவை ஏலம் விடப்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து பல வியாபாரிகள் பங்கேற்றனர். திருச்சியைச் சேர்ந்தவர், 38 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். தற்போது அடுக்கி வைத்திருந்த விறகுகளை லாரிகளில் எடுத்து செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறுகையில், சீமை கருவேல முள் மரங்கள் வெட்டிய இடங்களில் புதிதாக பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடும் பணிகள், மழைக்காலத்தில் துவங்கும், என்றார்.

