/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர்ரக போதை காளான் பறிமுதல்: 5 பேருக்கு சிறை
/
உயர்ரக போதை காளான் பறிமுதல்: 5 பேருக்கு சிறை
ADDED : நவ 15, 2024 02:24 AM

தொண்டாமுத்துார்:கோவை மாவட்டம், ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட நரசீபுரம் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த நரசீபுரத்தை சேர்ந்த சரவணகுமார், 26, பிரசாந்த், 30, ஆகியோரை பிடித்து, சோதனை செய்தனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் தங்கியிருந்த இடத்தில், போலீசார் சோதனை செய்தபோது, விற்பனைக்காக வைத்திருந்த, 589 கிராம் போதை காளான், 1 கிலோ உயர்ரக கஞ்சா, 13 கிலோ குட்கா, நான்கு பைக்குகள், ஆறு மொபைல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். போதை காளான் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்திருந்த, பி.என்.புதுாரை சேர்ந்த அமரன், 30, உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து எஸ்.பி., கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறும் போது, 'இதில் ஈடுபட்ட ஐந்து பேரும், கல்லுாரி நண்பர்கள். இவர்கள், வெளிநாடுகளில் இருந்து, போதை காளானை கூரியர் மூலம் வாங்கி, விற்பனை செய்து வந்துள்ளனர்,' என்றார்.