/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேட்டரிங் நிறுவனங்களில் பழைய உணவு பறிமுதல்
/
கேட்டரிங் நிறுவனங்களில் பழைய உணவு பறிமுதல்
ADDED : ஜூலை 31, 2025 09:59 PM
கோவை; மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், பீளமேடு பகுதிகளில் செயல்படும் கேட்டரிங் நிறுவனங்களில், திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், சுகாதாரமில்லாத உணவை, பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினர்.
அசைவம் மற்றும் சைவ உணவுகளை அருகருகே வைத்து இருந்தது, பூச்சி மேலாண்மை மேற்கொள்ளாமை , சுகாதாரமின்மை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''பீளமேடு கேட்டரிங் நிறுவனங்களில், விதிமீறி கண்டறிந்து உரிமையாளர்களை எச்சரித்துள்ளோம். சுகாதாரமில்லாத, 3.5 கிலோ உணவு வைத்திருந்தனர். அதை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டது.
கேட்டரிங் நிறுவன உரிமையாளர்களுக்கு, வழிகாட்டுதல் கூட்டம் விரைவில் நடத்தவுள்ளோம். விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்,'' என்றார்.