sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உரிமம் பெறாத கழிவுநீர் லாரிகள் பறிமுதல்; மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

/

உரிமம் பெறாத கழிவுநீர் லாரிகள் பறிமுதல்; மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

உரிமம் பெறாத கழிவுநீர் லாரிகள் பறிமுதல்; மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

உரிமம் பெறாத கழிவுநீர் லாரிகள் பறிமுதல்; மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை


ADDED : பிப் 23, 2024 12:10 AM

Google News

ADDED : பிப் 23, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;'உரிமம் பெறாது இயங்கும் கழிவுநீர் லாரிகள் பறிமுதல் செய்யப்படும்' என, மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் மாநகராட்சி மற்றும் தனியார் கழிவுநீர் லாரிகளின் டிரைவர்கள், உரிமையாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நேற்று நடந்தது.

அப்போது, அவர் பேசியதாவது:

கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடுவோர் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிபுரிய வேண்டும். அனைத்து தனியார் லாரி உரிமையாளர்களும் மாநகராட்சி உரிமம் பெற்று வாகனங்களை இயக்க வேண்டும்; இல்லையேல், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

தொழிற்சாலை மற்றும் அபாயகரமான கழிவுகள் லாரிகள் வாயிலாக அகற்றப்பட்டது தெரியவந்தால் உரிமம் ரத்து செய்யப்படும். அனைத்து வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டும். இந்த வாகனங்கள் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கப்படும்.

ஒரு முறை கழிவுநீர் வெளியேற்ற, 6,000 லிட்டர் வரை ரூ.200; அதற்கு மேல் ரூ.300 உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கட்டணம் செலுத்தி வெளியேற்ற வேண்டும். கழிவுநீர் அகற்ற மாநகராட்சியின், 0422 14420 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

மாநகராட்சி நகர் நல அலுவலர்(பொ) வசந்த் திவாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us