/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேட்டர், விக்கெட் கீப்பரை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்வதற்கான தேர்வுத் திறன் போட்டி
/
பேட்டர், விக்கெட் கீப்பரை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்வதற்கான தேர்வுத் திறன் போட்டி
பேட்டர், விக்கெட் கீப்பரை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்வதற்கான தேர்வுத் திறன் போட்டி
பேட்டர், விக்கெட் கீப்பரை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்வதற்கான தேர்வுத் திறன் போட்டி
ADDED : டிச 25, 2024 08:20 PM
கோவை; கிரிக்கெட் வீரர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும்,பேட்டர் மற்றும் விக்கெட் கீப்பர்களுக்கானதேர்வுத் திறன்போட்டி தேர்வு, ஜன., 11ம் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமானது, கிரிக்கெட் வீரர்களிடம் தனித்திறமைகளை கண்டறிந்து, தேவையான பயிற்சி அளித்து, அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. இதற்கென, அந்தந்த மாவட்ட சங்கங்கள் சார்பில், தகுதி போட்டி தேர்வு நடத்தி, வீரர்களை தேர்வு செய்து வருகிறது.
அந்த வகையில், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ஜன., 11ம் தேதி பேட்டர்கள் மற்றும் விக்கெட் கீப்பர்களை(ஆண்கள்) தேர்வு செய்வதற்கான திறன் போட்டி நடக்கிறது. ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் காலை, 7:30 மணிக்கு இத்தேர்வு நடக்கிறது.
கோவை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு, 13 முதல், 21 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்கேற்கலாம். மாநில அளவில் விளையாடிய, 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் விளையாடியவர்கள், இதில் பங்கேற்க முடியாது.
பங்கேற்க விரும்புவோர், ராமகிருஷ்ணா கல்லுாரி வளாகத்தில் உள்ள, மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் இன்று முதல்(காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை) விண்ணப்பங்கள் பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும், 30 முதல் ஜன., 6ம் தேதி வரை மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
இதில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், சென்னையில் பயிற்சி வழங்கப்பட்டு, அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, 93608 58006 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம் என, சங்க செயலாளர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.