/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் 'சுய உதவிக்குழு கார்ப்பரேட் பஜார்'
/
மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் 'சுய உதவிக்குழு கார்ப்பரேட் பஜார்'
மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் 'சுய உதவிக்குழு கார்ப்பரேட் பஜார்'
மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் 'சுய உதவிக்குழு கார்ப்பரேட் பஜார்'
ADDED : பிப் 28, 2026 08:16 AM

பொள்ளாச்சி: கோவை மாவட்ட மகளிர் மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம், வி.வி.டி.என். டெக்னாலஜி மற்றும் என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்கள் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்தல் நிகழ்ச்சி, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
வி.வி.டி.என். டெக்னாலஜி பொது மேலாளர் தனசேகர், மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி, துணை முதல்வர் செந்தில்குமார், கார்ப்பரேட் பஜாரை துவக்கி வைத்தனர்.
வி.வி.டி.என். மனித வள மேம்பாட்டு துறை மேலாளர் விக்ரம், தீபிகா, கல்லுாரியின் மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் பேசினர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் நித்யா செய்து இருந்தார்.
இதில், கோவை, திருப்பூர், நாகபட்டிணம், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் இருந்து, 25க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர். காட்டன் புடவைகள், சிறு தானிய வகைகள், மூலிகை சோப், நீலகிரி தைலம், கருவாடு, தேங்காய் சிரட்டை, செயற்கை நகைகள், சாக்லேட், கேக், சூப் மிக்ஸ் என பலவகையான பொருட்களை மகளிர் சுய உதவிக்குழுவினர் காட்சிப்படுத்தினர்.
கார்ப்பரேட் நிறுவனங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பொருட்களை சந்தைப்படுத்துதலுக்காகவும், மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாவட்டத்தில், எட்டு கல்லுாரிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.

