/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்தவெளியில் விற்பதால் நோய் தொங்குது இறைச்சி(சீ)!அறிந்தும் சுகாதாரத்துறை வேடிக்கை
/
திறந்தவெளியில் விற்பதால் நோய் தொங்குது இறைச்சி(சீ)!அறிந்தும் சுகாதாரத்துறை வேடிக்கை
திறந்தவெளியில் விற்பதால் நோய் தொங்குது இறைச்சி(சீ)!அறிந்தும் சுகாதாரத்துறை வேடிக்கை
திறந்தவெளியில் விற்பதால் நோய் தொங்குது இறைச்சி(சீ)!அறிந்தும் சுகாதாரத்துறை வேடிக்கை
UPDATED : மார் 20, 2024 02:20 AM
ADDED : மார் 20, 2024 12:58 AM

கோவை:மாநகரில் பல இறைச்சிக்கடைகளில், திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில்,
தொங்க விட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை உட்கொள்வோருக்கு
மூளை, கல்லீரல் பாதிப்பு உட்பட பல பாதிப்புகள் ஏற்படும்; ஏன்...புற்றுநோய்
கட்டிகள் கூட உருவாகும் அபாயம் உள்ளதாக, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனால் இது குறித்து நன்கு தெரிந்தும், வேடிக்கை பார்க்கிறது சுகாதாரத்துறை.
மாநகராட்சி பகுதிகளில், இறைச்சி கடைகள் நடத்துவோர் மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிமம் பெற வேண்டும். ஆட்டு இறைச்சி உரிமம் பெற்ற கடையில், ஆட்டு இறைச்சி தவிர வேறு எதுவும் விற்கக்கூடாது.
ஆனால், சுகாதார விதிகளுக்கு மாறாக இறைச்சி விற்பதுடன், உரிமம் இல்லாமல் ஏராளமான கடைகள் முளைத்துள்ளன. மாநகராட்சி சார்பில் உக்கடம், சத்தி ரோடு, போத்தனுார் அறுவை மனைகள் மற்றும் துடியலுார் இறைச்சி கடைகள் செயல்படுகின்றன.
அறுவை மனைகளில் ஆடு, மாடுகளை வதை செய்து, 'சீல்' வைக்கப்பட்ட இறைச்சியை மட்டுமே, சுகாதார முறையில் கடைகளுக்கு கொண்டு வந்து விற்க வேண்டும். ஆனால், இறைச்சி கடைகளில் திறந்த வெளியில் ஆடு, கோழி உள்ளிட்டவை அறுக்கப்படுகின்றன.
திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி சுகாதார பிரிவினரும் கண்டுகொள்ளாததால், மனிதர்களுக்கு நோய் பாதிப்பு அபாயம் அதிகரித்துள்ளது.
நான்கு மணி நேரத்துக்குள்!
கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:
திறந்த வெளியில் வெட்டப்படும் இறைச்சிகளில் துாசி, வாகன புகையால் மாற்றம் ஏற்பட்டு, அவற்றை உண்பவர்களுக்கு, புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
பொதுவாக, ஆட்டுத்தொட்டியில் வெட்டப்படும் இறைச்சியை நான்கு மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.
அதற்கு மேல் பதப்படுத்தாமல் வைத்திருந்தால், இறைச்சி அழுக ஆரம்பித்துவிடும். ஆடு, மாடு உடலில் 'ஈகோலி' போன்ற ஏராளமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஆடு, மாடு இறந்ததும் அவை பல்கிப் பெருகி, அதை சிதைக்க ஆரம்பிக்கின்றன.
பூஞ்சை தொற்றும் ஏற்படலாம். இப்படி, கெட்டுப்போன இறைச்சியை சாப்பிட்டால், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். கிருமிகள் ரத்தக்குழாய்கள் வழியே சென்று மூளையை பாதிக்கும். 'ஹைடாடிட்' என்ற ஒட்டுண்ணி, கல்லீரலுக்கு சென்று அங்கு கட்டியை உருவாக்கும்.
நுரையீரலை அடையும் கிருமிகள் சுவாசப் பிரச்னை, இடைவிடாத இருமல், சளி போன்றவற்றை ஏற்படுத்த கூடும். பாதுகாப்பு இல்லாத இறைச்சியை, ஈ மொய்க்கும்போது காலரா போன்ற நோய்கள் ஏற்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விதிகளின்படி இறைச்சி கடைகள் செயல்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
பதப்படுத்தாமல் வைத்திருந்தால், இறைச்சி அழுக ஆரம்பித்துவிடும். ஆடு, மாடு உடலில் 'ஈகோலி' போன்ற ஏராளமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஆடு, மாடு இறந்ததும் அவை பல்கிப் பெருகி, அதை சிதைக்க ஆரம்பிக்கின்றன. பூஞ்சை தொற்றும் ஏற்படலாம். இப்படி, கெட்டுப்போன இறைச்சியை சாப்பிட்டால், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். கிருமிகள் ரத்தக்குழாய்கள் வழியே சென்று மூளையை பாதிக்கும். 'ஹைடாடிட்' என்ற ஒட்டுண்ணி, கல்லீரலுக்கு சென்று அங்கு கட்டியை உருவாக்கும்.

