/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டக்கலை பண்ணையில் நாற்றுகள் விற்பனை
/
தோட்டக்கலை பண்ணையில் நாற்றுகள் விற்பனை
ADDED : நவ 24, 2025 06:15 AM
சூலுார்: சூலுார் அடுத்த கண்ணம்பாளையத்தில் அரசு தோட்டக்கலை பண்ணை செயல்படுகிறது. இங்கு, குறைந்த விலையில் நாற்றுகள், விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதேபோல், மண்புழு உரம் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை நடக்கிறது. உயிர் பூஞ்சாண கொல்லியான டிரைக்கோடெர்மா விரிடி விற்பனை நடக்கிறது. இந்த பூஞ்சாண கொல்லி, மண் மற்றும் விதை வழியாக பரவும் நோய்களை, சுற்றுச்சூழல் பாதிப்பின்றி உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும்.
தோட்டக்கலை பயிர்களில் நாற்றாங்காலில் ஏற்படும் அழுகல் நோயை கட்டுப்படுத்தும்.மேலும், வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பம் புண்ணாக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 97913 87404 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

