நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சிட்டிசன்ஸ் வாய்ஸ் தலைவர் ஜெயராமன் கூறியதாவது: சிட்டிசன்ஸ் வாய்ஸ் சார்பில், முதியோர் இல்லங்களில் தங்கியிருக்கும் மூத்த குடிமக்களின் அனுபவங்கள் மற்றும் தேவைகள், பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து, அவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
இக்கருத்தரங்கம் வரும் 8ம் தேதி, காலை 10:00 மணிக்கு திருச்சி ரோடு, விவேகாலயா மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி பாஸ்கர், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் செயலாளர்மலைச்சாமி, கோவை கலெக்டர் கிராந்திகுமார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். இவ்வாறு ஜெயராமன் தெரிவித்தார்.